வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (26/05/2018)

கடைசி தொடர்பு:02:30 (26/05/2018)

ட்ரோனில் பறந்து வரும் தேநீர் -அசத்தும் ஐஐடி மாணவர்கள்

ஆளில்லா விமானம் மூலம் அதிவிரைவாக டெலிவரி செய்யும்  `டெக் ஈகிள்' எனும் உணவு நிறுவனத்தை ஐ.ஐ.டி மாணவர்கள் தொடங்கியுள்ளனர். 

ட்ரோன்

இயந்திரமாகச் சுழன்று கொண்டிருக்கும் பணிச்சூழ்நிலையில், பிட்சா முதல் தேநீர் வரையிலான அனைத்துவகை உணவுகளையும் இணையத்தில் ஆர்டர் செய்ய முடிகிறது. உணவுக்காகக் கடைகளை தேடி அலைய வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை. இருப்பினும், ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்யும்போது சில முக்கிய நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆர்டர் செய்த உணவுகள் தாமதமாக டெலிவரி செய்யப்படுகிறது. 

இதற்குத் தீர்வு காணும் விதமாக ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் `டெக் ஈகிள்' என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர் லக்னோவைச் சேர்ந்த ஐ.ஐ.டி மாணவர்கள் குழு. இணையம் மூலம் ஆர்டர்களைப் பெற்று, ஆர்டர் செய்தவர்களின் இருப்பிடத்துக்குக் குறித்த நேரத்தில் உணவுகள் டெலிவரி செய்யப்படு வருகிறது. ஐந்து மீட்டர் நீளம் கொண்ட இந்த ஆளில்லா விமானம் இரண்டு இறக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த டிரோன்கள் இரண்டு கிலோ எடை வரையிலான பொருட்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது. மேலும், பத்து கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தேநீரை டெலிவரி செய்து வருகிறது. ஆவி பறக்க தேநீர் பறந்து வருவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து, பேசிய `டெக் ஈகிள்' நிறுவனத் தலைவர் விக்ரம் சிங், `இந்த ஆளில்லா விமானத்தில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால், இணையத்தில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் முகவரியை ட்ரோனில் பதவி செய்துவிடுவோம். எனவே, குறித்த நேரத்தில் அதிவிரைவாக உணவுகள் டெலிவரி செய்யப்படுகிறது' என்றார்.