வாகன விபத்துக்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு..! | Motor vehicle act amended for accident compensation scale

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (26/05/2018)

கடைசி தொடர்பு:05:00 (26/05/2018)

வாகன விபத்துக்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு..!

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

வாகன விபத்துக்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு..!

புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னும் செயல்வடிவத்துக்கு வராத நிலையில் பழைய மோட்டார் வாகன சட்டத்தில் விபத்து இழப்பீடு குறித்த புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

இன்ஷூரன்ஸ்

மத்திய சாலை போக்குவரத்து துறையின் அறிவிப்புபடி, இதுவரை வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.50,000 மற்றும் உடலில் ஏதேனும் ஒரு பாகம் நிரந்தரமாகச் செயலிழந்தால் அதற்கு ரூ.25,000 இழப்பீடும் டிரைவர் சார்பாக இன்ஷுரன்ஸ் நிறுவனங்களால் வழங்கப்பட்டுவருகிறது. இந்தச் சட்டம் மே, 22 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழப்புகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாகவும், உடலின் பாகம் செயலிழந்தால் குறைந்த பட்ட தொகையாக ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும். மேலும், உடல் செயலிழந்தால் அதற்கான இழப்பீட்டை 5,00,000 x செயலிழப்பு சதிவிகிதம் எனும் முறையில் கணக்கிட்டு தரப்படும் என்று கூறியுள்ளார்கள். சிறிய காயங்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்கள். 

பழைய மோட்டார் வாகனச் சட்டத்தில் இழப்பீடு மிகவும் குறைவு என்பதால் விபத்துக்கு உள்ளாகும் பலரும் மோட்டார் விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்திடம் முறையிடுகின்றனர். இந்த சிரமத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டுவந்துள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கு இழப்பீடு குறைவு என்று நினைக்கும் நிலையில் மக்கள் தீர்ப்பாயத்தை அணுகலாம். இந்த புதிய இழப்பீட்டுத் தொகைகள் ஜனவரி 2019 முதல் ஆண்டுக்கு 5 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இழப்பீடு சட்டம்

மோட்டார் வாகனங்களுக்கு  Third party இன்ஷுரன்ஸ் ப்ரீமியம் கடந்த காலங்களில் கொடுக்கப்பட்ட கிளெய்மை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது என்பதால் மத்திய அரசின் இந்த முடிவால் இன்ஷுரன்ஸ் ப்ரீமியம் அதிகரிக்க வாய்ப்பில்லை.