துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு த.மு.எ.க.ச. அஞ்சலி..!

தூத்துக்குடி  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு

தூத்துக்குடி  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சார்பில் மதுரையில் அஞ்சலியும், இந்த பயங்கரத்தை நிகழ்த்திய காவல்துறைக்கு எதிராக கண்டனக் கூட்டமும் நேற்று மாலை  நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

துப்பாக்கி சூட்டில்

மதுரை மாநகர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பெத்தானியபுரத்தில் நேற்று மாலை தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசின் காவல்துறையினரைக் கண்டித்து கண்டனக்கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் த.மு.க.எ.ச.வின் கௌரவத்தலைவர் பேராசிரியர் அருணன், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், எஸ்.ஏ.பெருமாள், மாநில துணைத்தலைவர் என்.நன்மாறன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவர் ஆனந்தக்குமார், த.மு.எ.க.ச மாவட்டத் தலைவர் ஸ்ரீரசா, மாவட்டச்செயலாளர் சாந்தாராம் ஆகியோர் கலந்து கொண்டனர். போலிசின்  துப்பாக்கி சூட்டுக்கு பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டமும் நடந்தது. கூட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி மதுரை பாலன், மதுரை ராயப்பன் கவிதைகள், பாடல்கள் பாடினார்கள். உணர்ச்சிகரமாக நடந்த இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!