இந்தியன் ஓட்டல்ஸ் லாபம் 70% வளர்ச்சி..! | Indian Hotels’ profit up 70% to Rs79.3 crore

வெளியிடப்பட்ட நேரம்: 07:29 (26/05/2018)

கடைசி தொடர்பு:07:29 (26/05/2018)

இந்தியன் ஓட்டல்ஸ் லாபம் 70% வளர்ச்சி..!

இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் தாஜ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. மார்ச் மாதம் நிறைவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் 70.4 சதவிகிதம் உயர்ந்து ரூ.79.3 கோடியாக அதிகரித்துள்ளது.

டாடா குழுமத்தின் ஓர் அங்கமான இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் தாஜ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. மார்ச் மாதம் நிறைவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம்   70.4 சதவிகிதம் உயர்ந்து ரூ.79.3 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தக் காலாண்டில் நிறுவனத்தின் வணிகம் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளதால், லாபம் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது.

லாபம்

இதே காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 8.9 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,164.02 கோடியாக உயர்ந்துள்ளது.
இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் கூட்டு நிறுவனங்களின் நிகர லாபமும் 53 சதவிகிதம் உயர்ந்து ரூ14.58 கோடியிலிருந்து ரூ.22.37 கோடியாக அதிகரித்துள்ளது.  அதேசமயம், இந்நிறுவனம்  இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.45.60 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-18 ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 2 சதவிகிதம் உயர்ந்து ரூ.4, 165.28 கோடியாக அதிகரித்துள்ளது.


[X] Close

[X] Close