வெளியிடப்பட்ட நேரம்: 06:41 (26/05/2018)

கடைசி தொடர்பு:06:41 (26/05/2018)

பேங்க் ஆஃப் பரோடா நிகர இழப்பு ரூ.3,102 கோடி

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ. 3,102.34 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது.

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ. 3,102.34 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. இது இதற்கு  முந்தைய  நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.154.72 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. வாராக்கடன்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ததாதல், இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே காலாண்டில் வங்கி கடன்களுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.7,052.53 கோடியாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய காலாண்டில் ரூ.2,425.07 கோடியாக இருந்தது.

இழப்பு

இதே காலாண்டில் வங்கியின் நிகர வருவாய் ரூ.12,852.44 கோடியிலிருந்து ரூ.12,735.16 கோடியாக சரிவடைந்துள்ளது.வங்கியின் வாராக்கடன் 10.46 சதவிகிதத்திலிருந்து 12.26 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், மொத்த  வாராக்கடன் ரூ.42, 718.70 கோடியிலிருந்து ரூ.56, 480.39 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. வங்கியின் நிகர வாராக்கடன் காலாண்டில் 5.49 சதவிகிதம் உயர்ந்துரூ.18.080.18 யிலிருந்து ரூ.23, 482.65 கோடியாக அதிகரித்துள்ளது.