11 மயில்களின் உயிரைப் பறித்த அக்னி வெயில்!

ராஜஸ்தான் வனப்பகுதியில் அதிக வெப்பத்தின் காரணமாக 11 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

மயில்

ஒவ்வொரு வருடமும் கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே அக்னி நட்சத்திரம் பற்றிய பயம் நம்மை வாட்டி எடுக்கும். இந்த வருடம் கோடை காலம் தொடங்கும் முன்பே பல மாநிலங்களில் வெயிலின் கொடுமை ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் மாதத்துக்கு முன்பே பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தொட்டது. சுட்டெரிக்கும் வெயிலினால் முதியோர்கள், குழந்தைகள் எனப் பலரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு வருடமும் வெயிலினால் ஏற்படும் இறப்புகளும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆந்திராவில் பல்வேறு காரணங்களால் இறப்பவர்களில் 5-ல் ஒருவர் வெயிலினால் இறக்கின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள பில்வாரா ரெய்சிஸ்ங் புரா என்ற வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் தாங்காமல் 11 மயில்கள் உயிரிழந்துள்ளன. மேலும், மயங்கிய நிலையில் இருந்த இரண்டு மயில்களை வனத்துறை மற்றும்  கால்நடை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!