வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (26/05/2018)

கடைசி தொடர்பு:12:10 (26/05/2018)

சாமித்தோப்பு பதிக்குள் நுழைய முயன்ற அதிகாரிகள்! நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பதிக்குள் செல்ல முயன்ற இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை சிலர் தடுத்துநிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பதிக்குள் செல்ல முயன்ற இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை சிலர் தடுத்துநிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாமித்தோப்பு பதிக்குள் நுழைய முயன்ற அதிகாரிகள்

கன்னியாகுமரி அருகே அமைந்துள்ளது சாமித்தோப்பு அய்யா வைகுண்ட சுவாமி பதி (கோயில்). இந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த முயன்றது. இதை எதிர்த்து கோயில் நிர்வாகிகள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோயிலை கையகப்படுத்த தடையில்லை என கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த மாசி மாதம் அய்யா வைகுண்டர் பிறந்த தினவிழாவின்போது கோயிலுக்குள் நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் அளித்த காணிக்கையை எடுத்துச்சென்றனர். அதை தடுத்த சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அய்யா பதியை அரசு எடுக்கக்கூடாது என பாலபிரஜாதிபதி தலைமையில் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பதிக்குள், இந்து சமய அறநிலையத்துறை சாமித்தோப்பு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பொன்னி தலைமையில் அதிகாரிகள் சாமித்தோப்பு பதிக்குள் நுழைய முயன்றனர். இதற்கு கோயில் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் பதிக்குள் செல்லமுடியாமல் திரும்பிச்சென்றனர்.