வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (26/05/2018)

கடைசி தொடர்பு:23:00 (26/05/2018)

காடுவெட்டி குரு மரணம் - கடலூர் மாவட்டத்தில் 22 பேருந்துகள் உடைப்பு!

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட 13 இடங்களில் 22 அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டது. இதில் அரசு பேருந்து 20, தனியார் பேருந்து 2 ஆகும்.

கடலூர் மாவட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மறைவையொட்டி 13 இடங்களில் 22 பேருந்துகளின் கண்ணாடிகள்  உடைக்கப்பட்டுள்ளது. 6 பேர் கைது  செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் கடையடைப்பும் நடந்ததுள்ளது. 

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு நேற்று இரவு சென்னையில் உயிரிழந்தார். இதனையடுத்து குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. குருவின் மறைவையொட்டி கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட 13 இடங்களில் 22 அரசு பேருந்துகள்  உடைக்கப்பட்டது. இதில் அரசு பேருந்து 20, தனியார் பேருந்து 2 ஆகும். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

நெய்வேலி, வடலூர், காட்டுமன்னார்கோவில், சோழதரம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் குறைந்த அளவு மட்டுமே இயங்கியது. 
அரசு பேருந்துகள் இயங்கியது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கார், வேன், மினி லாரி போன்ற வாகனங்களில் ஏராளமானவர்கள் மறைந்த குருவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் வடலூர், சேத்தியாத்தோப்பு, குமாரக்குடி, சோழதரம் போன்ற ஊர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸார் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். பேருந்துகள் சரிவர இயங்காத காரணத்தினாலும், கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாலும் மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.