`நான்கு ஆண்டுகள் ரிப்போர்ட்..மோடி அரசு அனைத்திலும் தோல்வி' - சொல்கிறார் ராகுல் | rahul gandhi tweet about modi government’s 4 years rule

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (26/05/2018)

கடைசி தொடர்பு:22:00 (26/05/2018)

`நான்கு ஆண்டுகள் ரிப்போர்ட்..மோடி அரசு அனைத்திலும் தோல்வி' - சொல்கிறார் ராகுல்

நான்கு ஆண்டுகள் கடந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும், மோடி அரசை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. பா.ஜ.க அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது என்று ரிப்போர்ட் கார்டை வெளியிட்டுள்ளார். 

ராகுல்

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் ஆட்சிக்காலம் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனைப் பா.ஜ.கவினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடியும் ட்விட்டரில்,`பா.ஜ.க அரசின் மீது இந்திய மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்துள்ளனர். இந்தியாவின் மக்களுக்காக இதே ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து சேவை செய்வோம்' எனப் பதிவிட்டிருந்தார். 

ராகுல் ட்வீட்

இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் `நான்கு ஆண்டு ரிப்போர்ட் கார்டு' என்ற தலைப்பில் மோடி அரசை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அதில், `விவசாயம், வேலைவாய்ப்பு, பெட்ரோல் விலை, வெளிநாட்டுக் கொள்கை என அனைத்திலும் துறையிலும் எஃப் எனக் குறிப்பிட்டு மோடி அரசு தோல்வியடைந்ததாக சுட்டிக்காட்டி உள்ளார். கோஷங்கள் உருவாக்குவது, சுய விளம்பரம் செய்வதில் A+ மற்றும் யோகாவில் B+ எனவும், குறிப்புகள் : மோடி மாஸ்டர் கம்யூனிக்கேட்டர், சிக்கலான பிரச்சினைகள் கையாள முடியாமல் தவிர்ப்பது' என்று பதிவிட்டுள்ளார். 
 


[X] Close

[X] Close