தூத்துக்குடி சம்பவத்தைத் திசை திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியீடு..! மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் திசை திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது பேசியதாக ஒரு ஆடியோவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த ஆடியோவில், ஜெயலலிதா மருத்துவர்களுடன் பேசுகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள், எதிர் கட்சிகள் மற்றும் அமைப்புகள் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் திசை திருப்புவதற்காகத்தான் ஜெயலலிதா பேசும் ஆடியோவை வெளியிடப்பட்டுள்ளது என்று சந்தேகம் எழுந்துவருகிறது. இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் திசை திருப்பவே ஜெயலலிதா பேசும் ஆடியோ ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்கவேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!