வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (27/05/2018)

கடைசி தொடர்பு:02:00 (27/05/2018)

’காலா’ ரிலீசுக்கு முன்பே சாண்டிக்கு சந்தோஷ செய்தி!

பெண் குழந்தைக்குத் தந்தையாகி இருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் சாண்டி

’காலா’ வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அதன் நடன இயக்குநர் சாண்டிக்கு அதற்கு முன்பே ஒரு சந்தோஷ செய்தி. இரு தினங்களுக்கு முன் பெண் குழந்தைக்குத் தந்தையாகி இருக்கிறார். சாண்டியின் மனைவி சில்வியா சென்னை மருத்துவமனை ஒன்றில் சில தினங்களுக்கு முன் பெண் குழந்தையைப் பெற்றெடுக்க, தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

சாண்டி

இதுகுறித்து சாண்டியிடம் பேசியபோது, ’என்ன குழந்தைன்னாலும் ஓ.கே.ங்கிற மைண்ட்செட் எனக்கு இருந்தது. சில்வியா பெண் குழந்தைக்குதான் ஆசைப்பட்டாங்க. அவங்க ஆசை நிறைவேறியிருக்கு. காலா’ ரிலீஸ் டைம்ல பிறந்திருக்கா. ரஜினி சார் படத்துல ஒர்க் பண்ண எனக்கு வாய்ப்பு கிடைச்ச, கொஞ்ச நாள்ல எனக்கு மகளா வந்திருக்கா. பொண்ணு வந்த நேரம்தான் என்னோட வாழ்க்கையில டர்னிங் பாயிண்ட் மாதிரி ‘காலா’ ரிலீஸ் ஆக இருக்கு. ‘காலா’வுக்குப் பிறகு என்னோட கேரியர் கிராஃப் பக்காவா இருக்கும்கிற நம்பிக்கையும் இப்பவே வந்திடுச்சு’ என்கிறார்.

’குழந்தைக்குப் பெயர் தேர்ந்தெடுத்து விட்டீர்களா’ என்றால், ‘சாண்டி-சில்வியா’ ரெண்டு பேரோட முதல் எழுத்தும் ஒண்ணா இருக்கில்லையா, அதேபோல மகளுக்கும் இருக்கணும்’கிறது என் மனைவியோட ஆசையாம். அதே எழுத்துல தீவிரமா சர்ச் பண்ணிட்டிருக்காங்க’ என்கிறார்.