வெளியிடப்பட்ட நேரம்: 02:50 (27/05/2018)

கடைசி தொடர்பு:02:50 (27/05/2018)

கார்ப்பரேஷன் பேங்க் நிகர இழப்பு ரூ.1,838 கோடி..!

கார்ப்பரேஷன் வங்கி மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ரூ. 1,838 கோடி இழப்பு கண்டுள்ளது.

கார்ப்பரேஷன் வங்கி மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ரூ. 1,838 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது.

கார்ப்பரேஷன் வங்கி மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ரூ. 1,838 கோடியை நிகர இழப்பாக கண்டுள்ளது. இந்த வங்கி இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.159 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. வங்கியின் வாராக்கடனுக்கு  அதிக நிதி ஒதுக்கியதால், நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பு

வங்கியின் நிகர வாராக்கடன் 11.70 சதவிகிதத்திலிருந்து 16.21 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதே காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் 11.70 சதவிகிதத்திலிருந்து  16.21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வாராக்கடனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.853 கோடியிலிருந்து ரூ.4,441 கோடியாக உயர்ந்துள்ளது.

வாராக்கடன் அதிகளவில் உள்ள பொதுத்துறை சேர்ந்த 11 வங்கிகளை ரிசர்வ் வங்கி நேரடி கண்காணிப்பில் வைத்துள்ளது. கார்ப்பரேஷன் வங்கியியும் ரிசர்வ் வங்கியின் நேரடி கண்காணிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.