வெளியிடப்பட்ட நேரம்: 03:40 (27/05/2018)

கடைசி தொடர்பு:03:40 (27/05/2018)

இந்தியா சிமெண்ட்ஸ் லாபம் 2.88 சதவிகிதம் உயர்வு

நாட்டின் முன்னணி சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ்  நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ. 35.27 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ்  நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ. 35.27 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 2.88 சதவிகிதம் அதிகமாகும். இந்நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த காலாண்டில் ரூ.34.28 கோடியாக இருந்தது.

இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.401.73 கோடியிலிருந்து ரூ.1, 524.29 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டில் நிறுவனத்தின் செலவீனம் ரூ.1,377.49 கோடியாக இருந்தது. கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வருவாய் மற்றும் செலவீனம் ?அனைத்து ஜி.எஸ்.டிக்குள் வருவதால், இரண்டையும் ஒப்பிட முடியாது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லாபம்

கடந்த 2017-18 ம் நிதியாண்டில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபம் 56 சதவிகிதம் சரிந்து ரூ.66.44 கோடியாக சரிந்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.151.03 கோடியாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.5,880.16 கோடியிலிருந்து ரூ.5,456.77 கோடியாக சரிவடைந்துள்ளது. மேலும், இந்நிறுவனம் ரூ. 10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கிற்கு ரூ.80 டிவிடெண்ட் வழங்க  உத்தரவிட்டுள்ளது.