சந்திரனில் கால் பதித்த 4-வது விண்வெளி வீரர் மரணம்!

சந்திரனில் 31 மணி நேரம் நடமாடிய விண்வெளி வீரர் ஆலன் பீன் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

ஆலன் பீன்

சந்திரனில் கால் பதித்து நடந்து சாதனை படைத்த 12 விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆலன் பீன். இவர், அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணிபுரிந்த விண்வெளி வீரர் ஆவார். கடந்த 1969ம் ஆண்டில் சந்திரனுக்கு நாசா அனுப்பிய விண்கலத்தில் பயணம் செய்து, நிலாவில் கால் பாதித்த உலகின் நான்காவது விண்வெளி வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார். மேலும், சந்திரனில்  31 மணி நேரம் நடமாடி சாதனைப் படைத்தார். இதனால், ஆலன் பீன் உலகப் புகழ் பெற்றார். அதுமட்டுமின்றி நாசாவின் விண் ஆய்வு நிலையமான ஸ்கைலாப் பயணத்திலும் ஆலன் பீன் இடம் பெற்றார். 

ஆலன் பீன்

இந்நிலையில், 86 வயதாகும் ஆலன் பீன் கடந்த சிலமாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவின் ஹூஸ்டன் மருத்துவமனையில் கடந்த 2 வாரக் காலமாக சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி ஆலன் பீன் நேற்று காலமானார். இவரது, மரணத்துக்கு நாசா இரங்கல் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!