வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (27/05/2018)

கடைசி தொடர்பு:07:14 (28/05/2018)

காடுவெட்டி குருவின் உடல் நல்லடக்கம்..!

உடல்நலக் குறைவால் காலமான வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது ராமதாஸ், அன்புமணி இருவருமே கண் கலங்கி அழுதனர்.

காடுவெட்டி குரு

வன்னியர் சங்கத்தின் மாநில தலைவராகவும், பா.ம.க-வின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய காடுவெட்டி குரு உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதனையடுத்து குருவின் உடல் அவரது சொந்த ஊரான ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டிக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனால் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், ஒரு சில இடங்களில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்காணவர்கள் அஞ்சலி செலுத்த வந்தனர். இதனால் காடுவெட்டி மட்டுமில்லாமல் சுற்றியுள்ள கிராமங்களும் கூட்டத்தால் திணறியது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் தவித்தனர்.

இன்று காலை 10.30 மணிக்கு மேல் குருவின் உடல் அவரது இல்லத்தில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவருக்குச் சொந்தமான தோட்டத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. உடன் ராமதாஸ், அன்புமணி மற்றும் பா.ம.க நிர்வாகிகள் ஏராளமானோர்  ஊர்வலமாக வந்தனர். பின்னர் குருவின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். அப்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் கண் கலங்கி அழுதனர். அப்போது இக்கட்டான காலகட்டத்தின்போது எனக்கு மட்டும் இல்லை நம் கட்சிக்கும் அரணாக இருந்து மாவீரனைப் போல் காத்தவர் குரு. அதனால்தான் அவரை எல்லோரும் மாவீரன் என்று அழைத்தோம். குரு இல்லாமல் இனி நான் என்ன செய்யப்போகிறேன் எனப் பெருங்குரலெடுத்து அழுதார். பின்னர் குருவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகும் கூட்டம் கலையாததால் குருவின் குடும்பத்தினரே கூட்டத்தினரை விரட்டியடியத்தனர். இதனால் குருவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகும் கூட ஒரு வித பதற்றத்துடன் காணப்பட்டது காடுவெட்டி கிராமம்..

நீங்க எப்படி பீல் பண்றீங்க