`கோப்பையைக் கையில் ஏந்தப்போவது யார்? - ஐபிஎல் பைனலில் டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த சென்னை | IPL Final: CSK won the toss and choose to field against SRH

வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (27/05/2018)

கடைசி தொடர்பு:18:44 (27/05/2018)

`கோப்பையைக் கையில் ஏந்தப்போவது யார்? - ஐபிஎல் பைனலில் டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த சென்னை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திரசிங் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

ஐபிஎல்

Photo Credit: Twitter/IPL

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில், இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி, எலிமினேட்டரில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோதும் 4வது போட்டி இதுவாகும். இதுவரை நடந்த 3 போட்டிகளிலுமே சென்னை அணியே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. மும்பை மைதானம் சேசிங்குக்கு கைகொடுக்கும் என்பதால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்வது முக்கியமானதாகக் கருதப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஃபீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஹர்பஜன் சிங்குக்குப் பதிலாகக் கரண் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்துள்ள சாஹாவுக்குப் பதிலாக கோஸ்வாமியும் கலீலுக்குப் பதிலாக சந்தீப் ஷர்மாவும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  


[X] Close

[X] Close