`ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பரிந்துரைசெய்தால் நடவடிக்கை! - மத்திய அமைச்சர் உறுதி

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு இருக்கும் பொது எப்படி ஆளுநர் அங்கு போக முடியும் . அரசியல் கட்சி தலைவரும் கவர்னரும் ஒண்ணா . இந்த சமயத்தில் எப்படி அணுக முடியுமோ அப்படிதான் அணுக முடியும் .

'ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசு பரிந்துரைசெய்தால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

 கடலூர்

பா.ஜ.க-வின் சமதர்ம எழுச்சி மாநாடு விழுப்புரத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள கடலூர் வந்திருந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் செய்தியார்களைச் சந்தித்தார். மக்கள் பிரச்னையில் அக்கறைகொள்ளும் ஆளுநர், ஏன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று ஆய்வு நடத்தவில்லை என செய்தியார்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், `தூத்துக்குடியில் 144  தடை உத்தரவு இருக்கும்போது  எப்படி ஆளுநர் அங்கு  போக முடியும்? அரசியல் கட்சித்  தலைவரும் கவர்னரும் ஒண்ணா. இந்தச் சமயத்தில் எப்படி அணுக முடியுமோ அப்படித்தான் அணுக முடியும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகுதான் சொல்ல முடியும். 
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தற்போது தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருக்கிறது என  தமிழக முதல்வர் கூறிவருகிறார். தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாக உள்ளது என்றும், அவர்கள்  தமிழ்நாடு எந்த ஒரு முன்னேற்றமும் அடையக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக உள்ளார்கள் என்றும் நான்  ஒன்றரை வருடத்துக்கு முன்பிருந்து சொல்லி வருகிறேன். அதுவரைக்கும் ஏன்  மாநில அரசு  நடவடிக்கை எடுக்கவில்லை. தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும். ஆனால், மாநில அரசு நடவடிக்கை எடுக்காததால்தான் துப்பாக்கிச் சூடு வரை கொண்டுவந்துள்ளது. தீவிரவாதி ஊடுருவல் சம்பவத்தில், மாநில அரசு ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியமானது’’ என்றார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமா எனற கேள்விக்கு, `ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டுவந்து துரோகம் செய்தது தி.மு.க தான். அதை, தி.மு.க தலைவர் கருணாநிதிதான் திறந்துவைத்தார்.  தி.மு.க-வைச் சேர்ந்த ராஜா  அமைச்சராக இருந்தபோது, அப்போதைய மத்திய 
காங்கிரஸ் அரசுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதிகொடுத்தது. அப்போது காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி எப்படி அனுமதி கொடுத்தது? ஸ்டெர்லைட் போராட்டம்குறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையை மூட மாநில அரசு, மத்திய அரசுக்குப்  பரிந்துரைசெய்தால், மத்திய அரசு அதற்கான  நடவடிக்கை எடுக்கும்’’ என்று அவர் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!