தூத்துக்குடி படுகொலைகள்: ஸ்வீடன் வாழ் தமிழர்கள் மனிதச்சங்கிலி போராட்டம்!

ஸ்வீடன் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில்  நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், உலகத் தமிழர்களிடையே பேரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இதை எதிர்த்து போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.

துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, ஸ்வீடனில் வாழும் தமிழர்கள் ஒருங்கிணைத்த மனிதச்சங்கிலி போராட்டம், ஸ்டாக்ஹோம் நகரின் மையப் பகுதியான கிங்ஸ் கார்டன் பகுதியில் நடைபெற்றது. இணையம் மூலமாக ஒருங்கிணைந்த பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், குடும்பங்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த தமிழர்கள் இதில் கலந்துகொண்டனர். தூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டத்தைக் கண்டித்தும்,  உண்மையில் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பதை விளக்கும் வண்ணம் பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினார்கள். 

ஸ்வீடனில் வசிக்கும் ஈழத் தமிழர்களும் பெருவாரியாகக் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தைப் பற்றி சுவீடிஷ் மக்கள் விசாரிக்க, போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தார்கள். ஸ்வீடனில் தமிழகத்தின் பிரச்னைக்காக இவ்வளவு தமிழர்கள் கூடுவது இதுவே முதல் முறையாகும்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!