வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (28/05/2018)

கடைசி தொடர்பு:07:45 (28/05/2018)

`சலீம்' பட இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு !

விஜய் ஆண்டனியை வைத்து 'சலீம்' படத்தை இயக்கியவர் நிர்மல் குமார். இவர் தற்போது, அரவிந்த் சாமி, த்ரிஷாவை வைத்து 'சதுரங்க வேட்டை 2' படத்தை இயக்கிவருகிறார். இவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஹீரோவாக  விக்ரம் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

விக்ரம் பிரபு

முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என அனைத்துக்கும் முக்கியத்துவம் இருக்குமென்றும், ஜூலை மாதத்திலிருந்து  சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் ஹீரோயின் மற்றும் டெக்னீஷியன்களின் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விக்ரம் பிரபு, அறிமுக இயக்குநர் ராஜ்தீப் இயக்கத்தில் 'அசுரகுரு' என்ற படத்திலும், தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் 'துப்பாக்கி முனை' என்ற படத்திலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க