வெளியிடப்பட்ட நேரம்: 08:51 (28/05/2018)

கடைசி தொடர்பு:08:58 (28/05/2018)

நாடு முழுவதும் காலியாக உள்ள மக்களவை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்! 

நாடு முழுவதும் காலியாக உள்ள 4 மக்களவைத் தொகுதி மற்றும் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியுள்ளது. 

இடைத்தேர்தல்

சமீபத்தில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 223 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில்தான் தேர்தல் நடைபெறவில்லை. அதற்குக் காரணம், ஆர்.ஆர்.நகர்ப் பகுதியில் இருந்த ஒருவீட்டில் ஏராளமான வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்காரணமாக, அங்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இதேபோல, பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் 4 மக்களவைத் தொகுதி மற்றும் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருந்தன. 

காலியாக உள்ள இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பல்கர் மற்றும் பந்தரா - கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதேபோல, கர்நாடகாவின் ஆர்.ஆர்.நகர், கேரளாவின் செங்கண்ணூர், பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளிட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க