வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (28/05/2018)

கடைசி தொடர்பு:10:36 (28/05/2018)

என்டார்க்கை அடிப்படையாகவைத்து உருவான இந்தியாவின் அதிவேக ஸ்கூட்டர்

அடிப்படையில் என்டார்க்தான் என்றாலும் 20bhp பவர், 120+ கி.மீ வேகம் கிடைக்க பல பொறியியல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் சக்திவாய்ந்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது டிவிஎஸ். என்டார்க்  SXR 125 எனும் இந்த ஸ்கூட்டர், 200 cc பைக்குகளுக்கு நிகரான 20 bhp பவரை வெளிப்படுத்தக்கூடியது. ஆனால், இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு இல்லை. டிவிஎஸ்ஸின் பழைய  SXR 160 ஸ்கூட்டருக்குப் பதிலாக வந்திருக்கும் இது, இந்தியாவில் நடைபெறும் ஸ்கூட்டர் ராலியில் போட்டிபோடவே தயாரிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் என்டார்க்

எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டர், டிவிஎஸ்ஸின் எக்டார்க் ஸ்கூட்டரை அடிப்படையாகக்கொண்டது. கரடுமுரடான பாதைகளுக்காகவே தயார்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் ராலியில் 210 சிசி இன்ஜின் வரை பயன்படுத்தலாம் என்பதால், என்டார்க்கின் 125சிசி இன்ஜினை ரீபோர் செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. இந்த இன்ஜின், 20 bhp பவர் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. சாதாரண எக்டார்க் 9.5bhp பவர் மட்டுமே உருவாக்கக்கூடியது. ஆனால், அட்டகாசமாக 98 கி.மீ வேகம் வரை பாயக்கூடியது. 150சிசி இன்ஜின் கொண்ட பழைய எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர், 18 bhp பவர் மட்டுமே உருவாக்கக்கூடியது. புதிய ஸ்கூட்டர் 2 bhp கூடுதல் பவரைத் தருகிறது. இந்த 120 கி.மீ வேகத்துக்கு மேல் போகும் என்றும் டிவிஎஸ் பொறியாளர்கள் சொல்கிறார்கள்.

அதிக பவரை உருவாக்க இக்னிஷன் சிஸ்டம், இன்டேக் மற்றும் எக்ஸாஸ்ட் சிஸ்டம் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்கள். எந்த விதமான மாற்றங்களைச் செய்துள்ளார்கள் என்பது கேள்வியாகவே உள்ளது. 12 இன்ச் ஸ்டீல் வீல் மற்றும் பெரிய நாப் வைத்த டயர்களை இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தியுள்ளார்கள். பிளாஸ்டிக் பாடி பேனல்களுக்குப் பதிலாக, மெட்டல் பாடி பேனல்கள் உள்ளன. இதனால், என்டார்க் ஸ்கூட்டரை விட என்டார்க்  SXR 26 கிலோ எடைகுறைவாக உள்ளது. இது, டிவிஎஸ் ஜெஸ்ட்டை விட எடை குறைவு. வெறும் 90 கிலோதான். டிவிஎஸ் ரேஸிங்கின் ஆசிஃப் அலி மற்றும் ஷாமிம் கான், இந்த பைக்கோடு களத்தில் இறங்கியுள்ளார்கள்.