`கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள்' - பிரதமர் மோடி பெருமிதம்!

கடந்த 4 ஆண்டுகளில், 10 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். 

மோடி

கடந்த 2016-ம் ஆண்டு மே 1-ம் தேதி, பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்பு (பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா) என்ற திட்டத்தை மோடி தொடங்கிவைத்தார். கிராமப்புற பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க முடிவுசெய்யப்பட்டு, அதற்காக ரூ.8,000 கோடி ஒதுக்கப்பட்டு, திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்மூலம், லட்சக்கணக்கான மக்கள் இலவச எரிவாயு இணைப்புகள் பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டத்தின் பயனாளிகளுடன்  பிரதமர் மோடி பேசினார். நமோ ஆப் மூலமாகப் பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார். 

அப்போது,  ``உஜ்வாலா யோஜனா, ஒதுக்கப்பட்ட பழங்குடி இன மக்களின் உயிர்களைப் பலப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி, சமூக மேம்பாட்டுக்கு முக்கியப் பங்கை அளித்துள்ளது. வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளவர்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்மூலம் பெண்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர். பெண்கள் முன்னேற்றத்தில் இந்த அரசு அதிக கவனம் செலுத்திவருகிறது. கடந்த 4 ஆண்டுகளில், 10 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட இணைப்புகளைவிட அதிகம். 60 ஆண்டுகளில் வெறும் 13 கோடி இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. வரும் 2020-க்குள், இன்னும் 8 கோடி இணைப்புகள் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!