டப்பிங் சீரியல்களுக்கு டாட்டா... டி.வி நட்சத்திரங்கள் குஷி!

டப்பங் தொடர்களிலிருந்து நேரடி தமிழ் சீரியல்களுக்குத் திரும்புகிறது ராஜ் டி.வி

தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகச் சொல்லி, டப்பிங் சீரியல்களை எதிர்த்து வந்தனர் சின்னத்திரை நடிகர் - நடிகைகள். டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பும் சேனல்களிடம் அவற்றை ஒளிபரப்ப வேண்டாமென கோரிக்கையும் வைத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சில தமிழ் சேனல்களில் அதிகப்படியான டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது ராஜ் டி.வி டப்பிங் சீரியல்களின் எண்ணிக்கையைக் குறைப்பதென அதிரடியாக முடிவெடுத்திருக்கிறது.

டிவி

இதில், இதுநாள் வரை தினமும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த டப்பிங் சீரியல்களுக்குப் பதிலாக, இனி நேரடி தமிழ் சீரியல்கள் ஒளிபரப்பப்பட இருக்கின்றன. இன்று (28/5/2018) முதல், திங்கள் முதல் வியாழன் இரவு 7 மணியிலிருந்து 9.30 வரை நான்கு புதிய நேரடி தமிழ் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. 'கடல் கடந்து உத்யோகம்', 'கங்காதரனைக் காணோம்', 'கண்ணம்மா', 'ஹலோ சியாமளா', 'நலம் நலமறிய ஆவல்' என்கிற இந்த ஐந்து சீரியல்களையும் 'பாரதி அசோசியேட்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் நடந்த இந்தப் புதிய சீரியல்கள் அறிமுகப்படுத்தும் விழாவில் ராஜ் டி.வி நிறுவன உரிமையாளர்களுடன் நடிகர் சித்ரா லட்சுமணன், கிருத்திகா உள்ளிட்ட சின்னத்திரை நடிகர் - நடிகைகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.

'இது தொடக்கம்தான்; அடுத்தடுத்து நிறைய நேரடி தமிழ் சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன' என்கிற சேனலின் அறிவிப்பு, சின்னத்திரை நடிகர்- நடிகைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!