வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (28/05/2018)

கடைசி தொடர்பு:19:00 (28/05/2018)

ராஜீவ்காந்தி மருத்துவமனை நுண்கதிரியல் துறைக்கு ரூ.8.06 கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள்!

த்த நாள அடைப்புகளை சிகிச்சைக்குப் பயன்படும் அதிநவீன கருவிகள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளிலேயே முதன்முறையாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நுண் கதிரியல் துறைக்காக ரூ.8.06 கோடி மதிப்பில் இந்த மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.

அதிநவீன மருத்துவ உபகரணங்கள்

இந்தக் கருவியை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துப் பேசும்போது, "ரூ.8.06 கோடி மதிப்புள்ள டி.எஸ்.ஏ. (Digital Substracion Angiography) என்னும் பைபிலேன் யூனிட் (Biplane Unit) தொடங்கப்பட்டுள்ளது. இக்கருவியின் உதவியுடன், ரத்த அடைப்பு, ரத்தநாள வீக்கம், ரத்தக்கசிவு, ரத்த நாள வெடிப்பு போன்ற ரத்த பாதிப்புகளைக் கண்டறிந்து, அதிநவீன சிகிச்சை அளிக்க முடியும். தனியார் மருத்துவமனைகளில் இதற்கு ஒரு லட்சத்திலிருந்து 2.5 லட்சம் வரை செலவாகும். இங்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக அளிக்கப்படுகிறது. 

அதேபோல, ரூ.5.01 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கு (Upgraded 16 Slice)  சி.டி ஸ்கேன் இயந்திரங்கள் மூன்று வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் துல்லியமாகவும் விரைவாகவும் சி.டி.ஸ்கேன் செய்ய இயலும். விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

அமைச்சர் விஜயபாஸ்கர்

மேலும், ரத்த நாளம் மற்றும் திசுக்கள் பரிசோதனைக்காக ரூ.46 லட்சம் செலவில் கலர் டாப்ளர் (Colour Doppler Unit) இரண்டு கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நோயாளிகளுக்கான சிகிச்சை முறை மேம்படும். இது, துல்லியமாகவும் விரைவாகவும் பரிசோதனை சிகிச்சை முறைகள் சாத்தியமாவதால் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் ஜெயந்தி, மருத்துவ நிலைய அதிகாரி இளங்கோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க