செங்கனூர் இடைத்தேர்தல்; அதிக வாக்குப்பதிவால் கலக்கத்தில் 3 வேட்பாளர்கள்!

கேரள மாநிலம் செங்கனூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மதியம் 2 மணி நேரப்படி 50 சதவிகிதம் வாக்கு பதிவாகியுள்ளது.

கேரள மாநிலம் செங்கனூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மதியம் 2 மணி நேரப்படி 50 சதவிகிதம் வாக்கு பதிவாகியுள்ளது.

செங்கனூர் இடைத்தேர்தல்

2016-ல் நடந்த கேரள சட்டசபைத் தேர்தலில் செங்கனூர் சட்டசபைத் தொகுதியில் சி.பி.எம் வேட்பாளர் ராமச்சந்திரன் நாயர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக இருந்தது. இந்த நிலையில் செங்கனூர் தொகுதி இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. ஆளும் சி.பி.எம் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் ஆலப்புழா மாவட்டச் செயலாளர் சஜிசெறியான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், பா.ஜ.க சார்பில் முன்னாள் மாநிலத் தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மூன்று கட்சி வேட்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இன்று காலை 7 மணிக்கு செங்கனூர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. மதியம் 2 மணி நிலவரப்படி 50 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகப்படியான வாக்குப்பதிவு யாருக்குச் சாதகமாக அமையும் என மூன்று கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!