மே 30-ம் தேதி ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவு வெளியாகிறது!

இந்த வருடம் முதல்முறையாக நடைபெற்ற ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 30-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு

பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த வருடம் முதல் ப்ளஸ் ஒன் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் 7-ம் தேதி தொடங்கிய இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,795 மையங்களில் சுமார் 8.63 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன. இந்த வருடம் புதிதாக ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதால் மிகுந்த பயத்துடனேயே மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். 

இதன் முடிவுகள் வரும் மே 30-ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை   www.tnresults.nlc.in, www.dge1.tn.nlc.in மற்றும் www.dge2.tn.nlc.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!