வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (28/05/2018)

கடைசி தொடர்பு:20:40 (28/05/2018)

சுஸூகி ஜிக்ஸரில் வந்துவிட்டது ஏபிஎஸ்!

ஜிக்ஸர் SF பைக்கில் இருக்கும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்தான், ஆனால் இன்னும் FI வரவில்லை!

சுஸூகி ஜிக்ஸர் பைக்கின் புதிய வேரியன்ட் வெளியாகியுள்ளது. இதுவரை ஃபேரிங் வைத்த ஜிக்ஸர்  SF பைக்குகளில் மட்டுமே இருந்த ஏபிஎஸ் இப்போது ஜிக்ஸரிலும் வந்துவிட்டது. ட்வின் டிஸ்க் வேரியன்டை விட 8,000 ரூபாய் கூடுதலாக, ரூ.1.02 லட்சம் எனும் சென்னை ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது இந்த வேரியன்ட்.  SF பைக்கில் இருக்கும் அதே சிங்கிள் சேனல் ஏபிஎஸ்தான். ஜிக்ஸரின் இந்த புதிய வேரியன்ட் Metallic Triton Blue-Glass Sparkle Black, Candy Sonoma Red-Metallic Sonic Silver மற்றும் Glass Sparkle Black என மூன்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது இந்த பைக். 

சுஸூகி ஜிக்ஸர்

ஏபிஎஸ் தவிர 2018 ஜிக்ஸரில் புதிதாக வேறு எந்த மாற்றமும் இல்லை. ஜிக்ஸரில் இருப்பது 155cc ஏர் கூல்டு இன்ஜின். இது 14.8 bhp பவர் மற்றும் 1.4 kgm டார்க்கை உருவாக்கக்கூடியது. இதே இன்ஜினைக் கொண்ட  SF மற்றும் இன்ட்ரூடர் மாடல்களில்  FI தொழில்நுட்பம் இருந்தாலும், ஜிக்ஸர் பைக்கில் இன்னும் கார்புரேட்டர் இன்ஜின் மட்டுமே உள்ளது சுஸூகிக்குப் பின்னடைவு. சுஸூகி ஜிக்ஸர் ஏபிஎஸ் மாடல் ஹோண்டா ஹார்னெட் 160, யமஹா  FZ-s, பஜாஜ் பல்ஸர்  NS 160 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி  RTR 160 4V பைக்குகளுடன் போட்டிப்போடுகிறது. மேலே உள்ள அனைத்து பைக்குகளிலுமே ஆப்ஷனாக ஏபிஎஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.