`நிலம் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு வாழ்க்கை!’ - அசத்தும் காலா டிரெய்லர்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. 

காலா


இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா. இருவரது கூட்டணியில் வெளிவந்த கபாலி, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் 2-வது பட அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. படத்தின் பெயர் `காலா' என்று தெரிந்த உடனே, இந்தப் படத்துக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித், ``காலா திரைப்படம் மும்பைவாழ் திருநெல்வேலி மக்களின் கதைக்களம்’’ என்று தெரிவித்திருந்தார்.

காலா படம் வரும் ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்த் திரையுலகினரின் வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக காலா படத்தில் இடம்பெற்றுள்ள `செம்ம வெயிட்டு’ சிங்கிள் டிராக் தொழிலாளர்கள் தினமான மே 1-ம் தேதி வெளியிடப்பட்டது. படத்தின் டீசரும் வெளியாக பெரிய வரவேற்பைப் பெற்றது. சென்னை நந்தனத்தில் படத்தின் இசைவெளியீட்டு விழாவை சமீபத்தில் பிரமாண்டமாக நடத்தி முடித்தார் தயாரிப்பாளர் தனுஷ். 

இந்தநிலையில், காலா படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். அதில், `நம்ம உடம்புதான் நமக்குப் பெரிய ஆயுதம்.... கூட்டுங்கடா மக்கள....’, நிலம் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு வாழ்க்கை’ என ரஜினி பேசும் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. வில்லன் நானா படேகரின் வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லரில், ஈஸ்வரி ராவ் மற்றும் ஹூமா குரேஷி ஆகியோரின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.  

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!