`காற்றில் பெயர்ந்த அரசுப் பேருந்து மேற்கூரை!’ - மழை, கடல் சீற்றத்தால் வீட்டுக்குள் முடங்கிய குமரி மக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக.மழை பெய்வதாலும், கடல் சீற்றம் காரணமாகவும் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர்.

ன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக.மழை பெய்வதாலும், கடல் சீற்றம் காரணமாகவும் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

கன்னியாகுமரி கடல் சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. அத்துடன் தொடர்ந்து சாரல் மழையும் பெய்து வருகிறது. கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சேவை நிறுத்தப்பட்டது. கடல் சீற்றம் காரணமாகவும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததாலும், குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இன்று மாலை தமிழக - கேரள எல்லைப் பகுதியான வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி போன்ற அரபிக் கடல் பகுதிகளில் அலை பத்து அடிக்கும் மேல் எழுந்தது.

அரசு பேருந்தின் மேற்கூரையை சூறைக் காற்று பெயர்த்தது

அந்த நேரத்தில் வள்ளவிளை கடலோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளவிளை - குழித்துறை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தின் மேற்கூரையை சூறைக் காற்று பெயர்த்தது. கடலோரப் பகுதியில் கடல் சீற்றத்தால் பழுதடைந்த நிலையில் இருந்த 5 வீடுகள் இடிந்து விழுந்தன. இன்று மாலைவேளையில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!