வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (29/05/2018)

கடைசி தொடர்பு:15:35 (29/05/2018)

ரீகால் செய்யப்படுகிறது ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் RS பைக்குகள்!

ட்ரையம்ப் இந்தியாவில் CKD முறையில் விற்பனைசெய்த பர்ஃபாமென்ஸ் நேக்கட் சூப்பர் பைக்கான ஸ்ட்ரீட் ட்ரிபிள் RS பைக்கை திரும்பப்பெறுகிறது. விற்பனையான 100 பைக்குகளில் பிரச்னை இருப்பதாகவும், இந்த பைக்குகளை வாங்கிய கஸ்டமர்களை சர்வீஸ் சென்டருக்கு அழைத்துள்ளதாகவும் ட்ரையம்ப் மோட்டார்சைக்கில்ஸ் கூறியுள்ளது.

ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் RS

இந்த 100 பைக்குகளிலும், தயாரிப்பின்போது ஸ்விட்ச் கியர்கள் சரியாக பொருத்தப்படவில்லை. இதனால், ஸ்விட்ச் கியர்கள்மீது தண்ணீர் படும்போது இந்தப் பாகம் பழுதாகலாம். இதன்மூலம், இன்டிகேட்டர் லைட்டுகளும், பைக்கின் ஹெட்லைட்டும் சரியாக வேலைசெய்யாமல்போகும். இந்தப் பிரச்னையைச் சரிசெய்வதற்கே பைக்குகள் ரீகால் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்கள். பழுது இருக்கும் என்று குறிப்பிடப்படும் பாகத்தை புதிதாக மாற்றப்போகிறார்களா அல்லது சரிப்படுத்தித் தருகிறார்களா என்பது குறிப்பிடப்படவில்லை.  

ஸ்ட்ரீட் ட்ரிபிள்

 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் RS பைக்கை கடந்த ஆண்டு இந்தியாவில் கொண்டுவந்தது இந்நிறுவனம். ஏற்கெனவே விற்பனையில் இருந்த S எனும் வேரியன்ட்டைவிட, அதிக பவர் மற்றும் வசதிகள்கொண்ட RS. 765cc மூன்று சிலிண்டர் இன்ஜின் கொண்ட இந்த பைக், 121bhp வேகத்தையும், 77Nm டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. இதன் சென்னை ஆன்ரோடு விலை ரூ.12.17 லட்சம்.