பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் காலமானார்!

பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன், தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்தநிலையில்,இன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

முக்தா சீனிவாசன்

1958-ம் ஆண்டு, 'முதலாளி' என்ற படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் முக்தா சீனிவாசன். அடுத்து, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரை வைத்து பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். ரஜினி நடித்த 'பொல்லாதவன்' படத்தை இயக்கியவரும் இவரே. ஜெயலலிதாவின் 100-வது படமான 'சூரியகாந்தி' படத்தையும் இவர்தான் இயக்கினார். 65 படங்களை இயக்கிய இவர், தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்றார். 'நாயகன்' உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார்.

இயக்குநர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி அரசியலிலும் தடம் பதித்துள்ளார். மூப்பானார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த போது, அக்கட்சியின் பொதுச்செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.  இதுவரை சுமார் 350 சிறுகதைகள், மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். இவரின் சிறுகதைகள் அனைத்தும் 16 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. மேலும், ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’, ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு’, ‘கலைஞர்களோடு நான்’, ‘கதாசிரியர்களோடு நான்’, ‘அறிஞர்களோடு நான்’ போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்த இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!