இருவர் படுகொலைக்கு நியாயம் கேட்டு இரவிலும் தொடரும் சாலை மறியல்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, கச்சநத்தம் கிராமத்தில் மாற்றுச் சாதியினரின் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டும் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தும் உள்ள சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. 

இருவர் படுகொலை -சாலை மறியல்

நீண்ட காலமாக மாற்றுச் சாதியினரின் தாக்குதலுக்கு ஆளாகி வரும் இந்தக் கிராமத்து பட்டியல் இன மக்கள், அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 26 -ம் தேதி மதியம், கோயில் அருகே கால்மேல் கால் போட்டு பேசிக்கொண்டிருந்த பட்டியல் இன இளைஞர்களை மாற்றுச் சாதி இளைஞர்கள்  இழிவாகப் பேசியுள்ளனர். இதனால் பிரச்னை ஏற்பட்டதால், பட்டியல் இன இளைஞர்கள் போலீஸில் புகார் தெரிவித்தனர்.  ஆத்திரமடைந்த மாற்றுச் சாதியினர் கும்பலாக வந்து, நேற்று இரவு பட்டியல் இன மக்கள்மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இருவர் மரணமடைந்தனர். 6 பேருக்கு மேல் கடுமையான காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள், மதுரை நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்துள்ளனர்.

இருவர் படுகொலை

இந்தக்  கொடுமையான சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பட்டியல் இன அமைப்புகள் நேற்று காலையிலிருந்து  சாலை மறியல் நடத்திவருகின்றன. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. தற்போது, நள்ளிரவிலும் சாலையிலேயே படுத்தபடி போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!