வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (30/05/2018)

கடைசி தொடர்பு:10:50 (30/05/2018)

4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் ஆஃப்கானிஸ்தான் - முதல் டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு!

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான்

photo credit :@icc

ஆஃப்கானிஸ்தான் அணி சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது. இதையடுத்து, அந்த அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்த்துக் களமிறங்க உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போட்டி, வரும் ஜூன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அஜிங்கியா ரஹானே தலைமையில், இந்திய அணி பங்கேற்க உள்ளது. கேப்டன் கோலி, காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதற்கிடையே நேற்று, இந்த டெஸ்ட்டில் விளையாட உள்ள ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அஷ்கர் தலைமையில் அந்த அணி களமிறங்க உள்ளது. இதில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், அமீர் ஹம்சா மற்றும் ஜாகிர் கான் ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

ஆசியாவில் சுழற்பந்துவீச்சுக்குப் பெயரெடுத்த இந்திய அணிக்குக் கடும் சவால் விடுக்கும் விதமாக, சுழற்பந்துவீச்சாளர்களுடன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் சுழற்பந்துவீச்சில் சாதனை படைத்துவருகின்றனர். குறைந்த வயதில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர் என்ற பெருமையை  ரஷித் கான் ஏற்கெனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. முன்னதாக, இந்திய அணியில் ரவிச்சந்திர அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய 3 ஸ்ஃபின்னர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இந்திய டெஸ்ட்டுக்கான ஆஃப்கானிஸ்தான் அணி விவரம்: 

அஷ்கர் ஸ்டானிக்சய் (கேப்டன்), மொகமத் ஷஜாத் (வி.கீ), முஜீப் உர் ரஹ்மான், ஷித் கான், ஆமிர் ஹம்சா, நசீர் ஜமால், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹீதி, அஃப்சர் ஸஸாய், ஜாவேத் அகமதி, ஈசானுல்லா, மொகமது நபி, ரசயீத் ஷிர்ஸாத், யாமின் அகமட்ஸாய், வஃபாதார், ஜாஹிர் கான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க