அன்லிமிட்டெட் கால்கள், 2GB டேட்டாவுடன் ‘சுதேசி சம்ரிதி’ சிம் கார்ட்- பதஞ்சலி நிறுவனத்தின் அடுத்த அதிரடி

பாபா ராம் தேவ் நடத்திவரும் பதஞ்சலி நிறுவனம், ஆயுர்வேத பொருள்களை விற்பனைசெய்துவருகிறது.  இந்நிறுவனம், தற்போது தொலைத்தொடர்புத் துறையிலும் கால்பதித்துள்ளது. 

பதஞ்சலி சிம்

மக்களுக்குத் தேவையான பொருள்களான ஷாம்பூ, பேஸ்ட் போன்ற நுகர் பொருள்களை ஆயுர்வேத முறைப்படி தயாரித்து விற்பனை செய்துவருகிறது பதஞ்சலி நிறுவனம். மேலும், ஆடை தயாரிப்பு, பாதுகாப்புச் சேவை போன்ற துறைகளிலும் செயல்பட்டுவந்தது. இந்த நிறுவனம், நாடு முழுவதும் பொருள்களை விற்பனைசெய்துவருகிறது.

பதஞ்சலி

இதைத் தொடர்ந்து, தற்போது பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ‘சுதேசி சம்ரிதி’ என்ற பதஞ்சலி நிறுவனத்தின் சிம் கார்டையும் வெளியிட்டுள்ளது. நேற்று ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பதஞ்சலி நிறுவனரும் அதன் விளம்பரத் தூதருமான பாபா ராம் தேவ் பங்கேற்று, சிம் கார்டை அறிமுகப்படுத்தினார். இந்த சிம் கார்டு, முதலில் பிஎஸ்என் எல் மற்றும் பதஞ்சலி ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும், பின்னர் நாடு முழுவதும் இதன் சேவை விரிவுபடுத்தப்படும் எனவும் பாபா ராவ் தேவ் தெரிவித்துள்ளார். 

இந்த சிம் கார்டில் ரூ.144-க்கு ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் கால்கள், 2 GB டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ்-கள் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சிம் மூலம் 10 சதவிகித சிறப்புச் சலுகையில் பதஞ்சலி பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!