வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (30/05/2018)

கடைசி தொடர்பு:16:00 (30/05/2018)

`டியூஷன் எடுக்கக் கூடாது’ - அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு செக் வைத்த புதுச்சேரி அரசு!

`தனியார் டியூஷன் சென்டர் மற்றும் தனியார் பள்ளிகளில் டியூஷன் எடுக்கக் கூடாது’ என்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதுச்சேரி அரசு ‘செக்’ வைத்திருக்கிறது.

டியூஷன்

தமிழகத்தை ஒப்பிடும் வகையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, லேப்டாப், இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடை  உள்ளிட்ட அதிகமான வசதிகளை புதுச்சேரி அரசு செய்து கொடுக்கிறது. இருப்பினும் பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரிவடைந்துகொண்டே வந்தது. இந்நிலையில் தற்போது புதுச்சேரி கல்வித்துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், “அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளி நேரத்துக்குப் பிறகு, தனியார் பள்ளிகளில் டியூஷன் மற்றும் சிறப்பு வகுப்புகளை எடுப்பது, அரசுப் பள்ளிக் கல்வித்துறை விதிகளுக்கு எதிரானது. 

தனியார் பள்ளிகளில் கோச்சிங் மற்றும் டியூஷன் சென்டர்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்தப் பள்ளிகளின் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் ஆசிரியர்கள் அறிவுறுத்துவதோடு அதைக் கண்காணிக்கவும் வேண்டும். அதன்படி, அரசின் உத்தரவை மீறி வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள்மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க