சஞ்சய் தத் கதாபாத்திரத்தில் எப்படி இருக்கிறார் ரன்பீர் கபூர்?’ - `சஞ்சு’ ட்ரெய்லர் | Sanjay Dutt biopic movie sanju trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (30/05/2018)

கடைசி தொடர்பு:15:40 (30/05/2018)

சஞ்சய் தத் கதாபாத்திரத்தில் எப்படி இருக்கிறார் ரன்பீர் கபூர்?’ - `சஞ்சு’ ட்ரெய்லர்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள `சஞ்சு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

சஞ்சு

சர்ச்சை நாயகனாகப் பாலிவுட்டில் வலம் வந்த சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றுப் படம் `சஞ்சு’ என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. போதை வஸ்துகளுக்கு அடிமை, கேர்ள் ஃப்ரெண்ட்ஸ், நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு மற்றும் 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என சஞ்சய் தத் வாழ்வின் முக்கியமான அம்சங்கள் குறித்து பேசும் இந்தப் படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருக்கிறார். `த்ரீ இடியட்ஸ்’, `பி.கே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அவர். 

சஞ்சய் தத்தாக டைட்டில் ரோலில் ரன்கபீர் கபூர் நடித்திருக்கிறார். அவருடன் அனுஷ்கா ஷர்மா, சோனம் கபூர், தியா மிர்சா, பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள சஞ்சு படத்தின் திரைக்கதையை அபிஜத் ஜோஷியுடன் இணைந்து ராஜ்குமார் ஹிரானி எழுதியிருக்கிறார். சஞ்சய் தோற்றத்தில் ரன்பீர் கபூர் இருப்பது போன்ற புகைப்படங்கள், டீசர் ஆகியவை ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் அதிகாரபூர்வ முதல் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.