வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (30/05/2018)

கடைசி தொடர்பு:17:20 (30/05/2018)

குட்கா ஊழல் விவகாரம்..! வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ

குட்கா ஊழல் புகாரில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

குட்கா

குட்கா ஊழல் புகார் தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில், குட்கா ஊழல் விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு உத்தரவிட்டது.

இந்தநிலையில், குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த எப்.ஐ.ஆரில், 'அடையாளம் தெரியாத மத்திய சுங்கவரித்துறை அதிகாரிகள், அடையாளம் தெரியாத தமிழக அரசு அதிகாரிகள், அடையாளம் தெரியாத உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அடையாளம் தெரியாத பொதுத்துறை ஊழியர்கள், அடையாளம் தெரியாத நபர்கள்' என்று அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான ஆவணங்களைத் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.