`சொந்த ஊரில் காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம்’ - அன்புமணி அறிவிப்பு

``மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்” எனப் பா.ம.க-வின் இளைஞரணி தலைவர் அன்புமணி அறிவித்திருக்கிறார்.

காடுவெட்டி குரு

வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான காடுவெட்டி குரு உடல் நலக்குறைவால் கடந்த
25-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் இரவு உயிரிழந்தார். அதையடுத்து, காடுவெட்டி குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மறைந்த காடுவெட்டி குருவுக்கு பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பா.ம.க இளைஞரணி தலைவரும் எம்.பி-யுமான அன்புமணி, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அன்புமணி ராமதாஸ்

நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், ``ஜெ.குருவின் சொந்த ஊரான ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டியில் மணிமண்டபமும் அவரை அடக்கம் செய்த இடத்தில் நினைவிடமும் கோனேரிக்குப்பத்தில் தொடங்க உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையின் (தனியார்) சட்டக்கல்லூரிக்கு காடுவெட்டி குருவின் பெயர் வைக்கப்பட்டு நினைவுச்சிலை அமைக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பா.ம.க நிறுவனர்  ராமதாஸ், கட்சித் தவைவர் ஜி.கே.மணி உட்பட அனைவரும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட காடுவெட்டி குருவின் உருவப் படத்துக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!