சீமான் உள்ளிட்ட 6 பேரை ஜூன் 4-ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை!

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 19-ம் தேதி ம.தி.மு.க - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர்மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமான்

திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மோதிக்கொண்ட வழக்கில் சீமான் உட்பட 6 பேரை கைது செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 19-ம் தேதி ம.தி.மு.க - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர்மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில். முன்ஜாமீன் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், `நானும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் கடந்த 19-ம் தேதி, திருச்சி விமான நிலையம் வந்தனர். அவர்களை வரவேற்க வந்த இரு கட்சித் தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் பலத்த காயமடைந்த நிலையில் இரு தரப்பினரும் பரஸ்பரம், விமான நிலையத்தில் புகாரளித்தனர். நான் உட்பட 8 பேர்மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சம்பவம் நடக்கும்போது அந்தப் பகுதியில் நான் இல்லை. மேலும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன். எனவே இந்த வழக்கில் என்னைக் கைது செய்வதிலிருந்து முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் உள்ளிட்ட ஆறு பேரை ஜூன் 4-ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!