வறண்டுபோன கங்கை நதி... எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

இந்தியாவில் வற்றாத ஜீவநதி எனப் புகழப்படும் தேசிய நதியான கங்கை மிகவும் மோசமாகி வருகிறது. 

கங்கை

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் எப்போதும், பெருக்கெடுத்து ஓடும் கங்கை, தற்போது வறண்டு காணப்படுகிறது. இதனால், நீளமாகக் காணப்படும் கங்கை நதியில் ஆங்காங்கே மணல் திட்டுகள் குவியல் குவியலாகத் தென்படுகின்றன. அதிகரித்துவரும் வெப்பம் காரணமாக கங்கை நதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இது, நல்லதல்ல என்கின்றனர் நதி ஆய்வாளர்கள். 

முன்னதாக, மத்திய அரசின் தேசிய கங்கை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் சமீபத்தில் கங்கை பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கங்கை

PC - ani and hindustan times  

இதுகுறித்து பேசிய ஆறுகள் குறித்து ஆய்வு செய்து வரும் பி.டி.திரிபாதி கூறுகையில், உத்தரகாண்டில் கங்கை நதியில் அணைகள், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கால்வாய்கள், மற்ற மாநிலங்களுக்கு நீர் வழங்கல் உள்ளிட்ட காரணங்கள் கங்கையின் தற்போதைய நிலைக்குப் பின்னணி காரணமாக உள்ளது. கங்கையைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். 45 கோடி இந்திய மக்களின் நீராதாரமாகக் கங்கை விளங்குகிறது. இதே நிலை தொடர்ந்தால் கங்கை குளமாக மாறும்' என்றார். 

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் யு.கே. சவுத்ரி கூறுகையில், `உரிய நீர் மேலாண்மை இல்லாமல், கங்கை நீர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் கங்கை உலர்ந்து காணப்படுகிறது. இதனால், வாரணாசியில் அடுத்த 30-35 ஆண்டுகளில் கங்கை முழுமையாக வறண்டுவிடும்' என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!