வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (31/05/2018)

கடைசி தொடர்பு:07:58 (31/05/2018)

அழகப்பா பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணை வேந்தர் நியமிக்கப்பட்டதன் பின்னணி!

அழகப்பா பல்கலைக்கழகம்


அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சுப்பையாவின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி,  புதிய துணை வேந்தராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான முனைவர் ராஜேந்திரனை  நியமித்து, ஆளுநர் பன்வாரிலால்  உத்தரவிட்டுள்ளார்.

இவர், தற்போது இருக்கும் துணை வேந்தர் சுப்பையாவுக்கு வேண்டப்பட்டவர். அதனால்தான் அழகப்பா பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.  ஆளுநர் மாளிகையில் இருந்து அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக சுபாஷ் சந்திரபோஸ் நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் கசியத்தொடங்கின. இப்பல்கலைக்கழகப் பேராசியர்கள், ஊழியர்கள் அனைவரும் இவரைப் பற்றி விசாரிக்கவும், வாழ்த்துச் சொல்லவும் ஆரம்பித்துவிட்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், "திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தபோது பல்வேறு குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர், துணைவேந்தர் சுப்பையாவுக்கு நெருக்கமானவர். அதனால்தான் அழகப்பா பல்கலைக்கழக சிண்டிகேட் தேர்தலில் வெற்றிபெற்றார். செனட் உறுப்பினராகவும் ஆனார். இவரை தனக்கு அடுத்த துணை வேந்தராகக் கொண்டுவர கடுமையாக முயற்சி எடுத்தார் சுப்பையா. இப்படிப்பட்ட துணைவேந்தர் நியமனத்தை ஆளுநர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கெனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக செல்லத்துரையை நியமிக்க வேண்டாம் என்று சொன்னோம்.  அவர், துணைவேந்தராக வந்த பிறகுதான், நிர்மலா தேவி பிரச்னை ஏற்பட்டது. எனவே,  துணைவேந்தர் என்பவர் அப்பழுக்கற்றவராக இருக்க வேண்டும். நியமனமும் அதேபோன்றுதான் இருக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். 

அதன்பிறகுதான், ஆளுநர் அவசர அவரசரமாக முனைவர் ராஜேந்திரன் பெயரை டிக் செய்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்க இருக்கும் ராஜேந்திரனுக்கு நிறைய சவால்களும், சிக்கல்களும் காத்திருக்கிறது. இந்தத் துணைவேந்தரும் சுப்பையாவிற்கு வேண்டியவர் என்பதால்,  பல்கலைக்கழகம் சார்ந்த  நிறைய விஷயங்கள் மறைக்கப்படலாம் என்கிறார்கள் பல்கலைக்கழக ஊழியர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க