செங்கனூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது - கலக்கத்தில் கட்சிகள்! | counting has begun for assembly by-poll at Kerala chengannur

வெளியிடப்பட்ட நேரம்: 09:16 (31/05/2018)

கடைசி தொடர்பு:09:45 (31/05/2018)

செங்கனூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது - கலக்கத்தில் கட்சிகள்!

செங்கனூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

செங்கனூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

செங்கனூர் வேட்பாளர்கள்

2016-ல் நடந்த கேரள சட்டசபைத் தேர்தலில், செங்கனூர் சட்டசபைத் தொகுதியில் வெற்றிபெற்ற சி.பி.எம் வேட்பாளர் ராமச்சந்திரன் நாயர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியாக இருந்தது. இதையடுத்து, செங்கனூர் தொகுதிக்குக் கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. கேரளத்தில் ஆளும்கட்சியான சி.பி.எம்  வேட்பாளராக அக்கட்சியின் ஆலப்புழா மாவட்டச் செயலாளர் சஜிசெறியான், காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், பா.ஜ.க சார்பில் முன்னாள் மாநிலத் தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக மக்கள் மத்தியில் வலம் வந்தனர். இந்த மூன்று வேட்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு செங்கனூர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. எந்தக் கட்சி வெற்றிபெறும் என மக்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.