டீ-யில் புதுவரவு... தந்தூரி டீ - புனே இளைஞர்களின் பலே ஐடியா!

21-ம் நூற்றாண்டு மக்கள், தாங்கள் பயன்படுத்தும் பேனா முதல் கைக்குட்டை வரை அனைத்திலும் புதுமையை எதிர்பார்க்கின்றனர். மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய, தேநீரிலும் புதுமையைப் புகுத்தியுள்ளனர் புனேயைச் சேர்ந்த இரு இளைஞர்கள்.

தந்தூரி டீ

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள கராடி பகுதியில், ‘சாய் லா’ என்ற டீ கடையை பிரமோத் வங்கர் மற்றும் அமோல் ராஜ்தோ நடத்திவருகிறார்கள். இவர்கள், தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு `தந்தூரி டீ' எனும் புதுமையான தேநீர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இந்த 'தந்தூரி டீ'தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டுவருகிறது.

தந்தூரி

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், `எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், புது விதமாகப் பால் காய்ச்சியதைக் கவனித்தோம். அது, மிகவும் அருமையாகவும் சுவையாகவும் இருந்தது. இதேபோல, நாங்கள் நடத்திவரும் டீ கடையிலும் புதுமையாக டீ தயாரிக்க எண்ணி, தந்தூரி டீயைத் தயாரிக்கத் தொடங்கினோம். இதற்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. எங்களைப் பற்றியும் நாங்கள் அறிமுகம் செய்துள்ள தந்தூரி டீ பற்றியும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.  அதனால், வெளி மாநிலத்தவர்களும் எங்கள் கடைக்கு வந்து தந்தூரி டீயை ருசித்துச் செல்கின்றனர்' என்றார்.

டீ

 இந்த டீ, தந்தூரி அடுப்பில் சிறிய களிமண் பானையை வைத்து, நன்கு சூடுபடுத்துகின்றனர். சூடான பானையை வெளியில் எடுத்து, அதில் தயாரித்துவைத்த டீயை ஊற்றுகின்றனர். நன்கு கொதித்து நுரை பொங்கி வரும்போது, அதை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். இவர்கள் தயாரிக்கும் டீயைப் பார்க்கும்போதே, உடனடியாக அதைப் பருக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. ஒரு கப் டீ              ரூ.20-க்குக் கிடைக்கிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!