வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (31/05/2018)

கடைசி தொடர்பு:11:27 (31/05/2018)

`சமூக விரோதிகள் யார்?' - ரஜினிக்கு திருமாவளவன் கேள்வி

“சமூக விரோதிகள் யார் என்பதை ரஜினி தெளிவுபடுத்த வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவன்

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,  ”நடிகர் ரஜினிகாந்த் மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார். அவருடைய கருத்து  முதலமைச்சர் மற்றும் மதவாத சக்திகளின்  கருத்துகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. தமிழக முதல்வரும், நடிகர் ரஜினிகாந்த்தும் சமூக விரோதிகள் யார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.  வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்திருப்பது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்மீது போடப்பட்ட வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்” என்றவர், தி.மு.க-வினர் நடத்தும் போட்டி சட்டமன்றம்குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “அது வரவேற்கத்தக்கது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க