`மண்ணாகிவிடுமே பரவாயில்லையா?’ - ரஜினி கருத்துக்கு ராமதாஸ் ட்வீட்

ராமதாஸ்

`போராட்டங்கள் நடந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும்' என்று ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

`தமிழகத்தில் போராட்டங்களே கூடாது. போராட்டங்களை ஜெயலலிதாபோல இரும்புக்கரம்கொண்டு அடக்க வேண்டும்' என்று ரஜினிகாந்த் கூறியிருப்பதற்கு, ''பாசிசத்தின் உச்சம்... தவறான மனிதர்களைச் சரியான நேரத்தில் அடையாளம் காட்டியதற்காக, காலச்சூழலுக்கு தமிழக மக்கள் நன்றி கூற வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் நடந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்று ரஜினிகாந்த் கூறியதற்கு விளக்கம் தெரிவித்துள்ள ராமதாஸ், ''ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் தொடர்ந்து நடந்தால், தமிழகம் மண்ணோடு மண்ணாகிவிடுமே பரவாயில்லையா'' என்று வினா எழுப்பியுள்ளார்.

மேலும் தனது பதிவில், "ஒரு காலத்தில் சட்டப்பேரவையில் தம்பி துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய 3 தி.மு.க உறுப்பினர்களைக் கண்டு ஆளுங்கட்சி அ.தி.மு.க நடுங்கியது; வலிமையான எம்.ஜி.ஆர் அஞ்சினார். ஆனால், இன்று நிலைமை தலைகீழ். பினாமி எடப்பாடிக்கு அஞ்சி தி.மு.க அவையைப் புறக்கணிக்கிறது" என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!