``ரஜினியின் குரல் யாருடையது?” சந்தேகம் எழுப்பும் மு.க.ஸ்டாலின்

”ரஜினியின் குரல் யாருடையது?” என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.

ஸ்டாலின்

கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக திருவாரூர் சென்றுகொண்டிருந்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”போராட்டங்களால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறாரே?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், “என்னைப் பொறுத்தவரை, அது அவருடைய சொந்தக் குரலா என்பது சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. இதன் பின்னணிக் குரலாக, பி.ஜே.பி ஏற்கெனவே இதை சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க-வும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறது. எனவே, அந்தக் குரலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும், அவர் சூப்பர் ஸ்டார்.

அவரே, தீவிரவாதிகள் எனக்குத் தெரியுமென்று சொல்லியிருக்கின்ற காரணத்தால், அந்தத் தீவிரவாதிகள் யார் என்பதை அவர் நாட்டுக்கு அடையாளம் காட்டினால், நாட்டுக்கு அது நல்லதாக அமையும். அதை அவர் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதுமட்டுமல்ல, வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். போராட்டமில்லாமல் எந்தவொரு காரியத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. இந்தி எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, சுதந்திரப் போராட்டமாக இருந்தாலும் சரி, ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டமாக இருந்தாலும் சரி அனைத்துமே போராட்டங்கள் மூலமாகவே சாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது அவருக்குத் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!