பெற்றோருடன் சுற்றுலாவுக்கு வந்த இளம்பெண்ணுக்கு 11 பேரால் நடந்த கொடூரம்!

பாலியல் தொல்லை

கோவா கலங்கட் கடற்கரையில், இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக, புனேவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 2 சிறுவர்களும் அடக்கம். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சகோதரனை இந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது. கலங்கட் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் அவரின் பெற்றோர் புகார் அளித்ததன் பேரில், காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. கைதானவர்களில் இரண்டு சிறுவர்கள், உள்ளூர் கண்காணிப்பு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

"தன் சகோதரர் மற்றும் பெற்றோருடன் கலங்கட் கடற்கரைக்கு அந்தப் பெண் வந்திருக்கிறார். பெற்றோர், அருகில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளனர். இளம் பெண்ணும் அவர் சகோதரனும் கடற்கரையில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, சுற்றுலாவுக்கு வந்த 11 பேரால் பாலியல் துன்புறுத்தலுக்கு அந்தப் பெண் ஆளாகியுள்ளார். மேலும், அவர்கள் அந்தப் பெண்ணை படம் எடுத்துள்ளனர். இதைத் தடுத்த அந்தப் பெண்ணின் சகோதரனை அந்தக் கும்பல் தாக்கியுள்ளது" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!