ஐபிஎல்-க்கு எதிரான போராட்டத்தில் காவலரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!

தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது, காவலரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

கைது செய்யப்பட்ட மதன்குமார்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராகப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஏப்ரல் 10-ம் தேதி, சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி நடைபெறுவதற்கு எதிராக, மைதானத்துக்கு வெளியே பெரும்பாலான அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

அப்போது, காவலர் ஒருவரை போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சம்பவத்துக்கு ரஜினிகாந்த்தும் கண்டனம் தெரிவித்திருந்தார். காவலரைத் தாக்கியவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில், காவலரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமாரை திருவல்லிக்கேணி காவல்துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!