ஃபிலிம்ஃபேர் விருது: தேதியை அறிவித்த த்ரிஷா!

ஃபிலிம்ஃபேர் தென்னிந்திய மொழிகளுக்கான விருது வழங்கும் விழா தேதியை அறிவித்தார் நடிகை த்ரிஷா

பிரபலமான ஃபிலிம்ஃபேர் இதழ், ஆண்டுதோறும் சினிமா கலைஞர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கிவருகிறது.  தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்குநர் என பத்துப் பிரிவுகளில் விருதுகளை வழங்கும் 'ஃபிலிம்ஃபேர் சவுத்', 65-வது ஆண்டாக விழா நடத்த உள்ளது.

இதற்கான தேதியை அறிவிக்கும் 'பத்திரிகையாளர் சந்திப்பு, இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றிவைத்து, 'ஜூன் 16, 2018 அன்று 'ஹைதராபாத் இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் ஃபிலிம்ஃபேர் சவுத் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி' நடைபெற இருப்பதாக அறிவித்தார் நடிகை த்ரிஷா. அப்போது, தான் முதன்முதலாக 'வர்ஷம்' படத்துக்காக ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

த்ரிஷா

அப்போது, 'சாமி 2'ல் நடிக்கிறீர்களா எனக் கேட்டதற்கு 'இல்லீங்க, நான் 'சாமி-2'ல் இல்லை' என மறுத்தார். ஃபிலிம்ஃபேர் இதழின் ஆசிரியர் ஜிதேஷ் பிள்ளை மற்றும் விருது விழாவின் ஸ்பான்ஸரான ஜியோ குழுமத்தின் உயரதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!