ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. 

போலீஸ் பாதுகாப்பு

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டிருந்தவர்களைத் தூத்துக்குடிக்குச் சென்று நேரில் சந்தித்து ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் பணம்மும் நிதியுதவி அளித்தார். அதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், `தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததே வன்முறைக்குக் காரணம். காவல்துறையினரைத் தாக்கியவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

அவருடைய கருத்துக்கு மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், போயஸ்கார்டனிலுள்ள ரஜினிகாந்த்தின் வீட்டை ஏதேனும் அமைப்புகள் முற்றுகையிட வாய்ப்புள்ளது என்பதால் அவருடைய வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போயஸ்கார்டன் ரஜினி வீடு அமைந்திருக்கும் சாலையில் கூடுதலாகக் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!